Idhayam Matrimony

வட நாட்டவர்கள் குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசிய கருத்தால் சலசலப்பு

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      தமிழகம்
Durai-Murugan 2024-12-03

வேலூர், தமிழ்நாடு எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் பேசியதை கண்டித்து அமைச்சர் துரைமுருகன் பேசிய கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்காமல் இருப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்து பரிமாற்றம் கடுமையாக நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தமிழக எம்.பி.க்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாகரிகமற்றவர்கள் என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அவர் அந்த வார்த்தையை திரும்ப பெறுவதாக கூறினார். எனினும் அவரை கண்டித்து தி.மு.க. எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. சார்பில் நேற்று முன்தினம் (மார்ச் 12) தமிழ்நாடு முழுக்க கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் வேலூரில் தி.மு.க.  சார்பில் நடந்த கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தமிழக நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.

அந்த விழாவில்  பேசிய அமைச்சர் துரைமுருகன் , "ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழனின் நாகரிகம். ஆனால் வடநாட்டவன் அப்படியல்ல. அங்கு 5 பேர் இருந்தாலும், 10 பேர் இருந்தாலும் ஒருத்தியை திருமணம் செய்து கொள்வார்கள். ஒருவன் போய்விட்டால் மற்றொருவன் வருவான். இந்த நாற்றமெடுத்த நாகரிகம்தான் உங்களுடையது என்று பேசியுள்ளார்.

அமைச்சர் துரைமுருகனின் இந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து