முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர் : முதல்வருக்கு அன்பில் மகேஷ் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2025      தமிழகம்
Anbil 1

சென்னை, பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 46,767 கோடி ஒதுக்கியுள்ளார் தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர் என்று அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நாடே போற்றும் வகையில் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் 2025-26ஆம் நிதியாண்டிற்கான #எல்லார்க்கும்_எல்லாம் நிதிநிலை அறிக்கையினை  தாக்கல் செய்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர். மேலும் மாநில உரிமைகளைக் காக்கும் வகையில் ‘எத்தகையத் தடைகள் வரினும் இந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை தமிழ்நாடு அரசே கொடுக்கும்!’ என உறுதியோடு அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கும், நிதியமைச்சருக்கும் மாணவர்கள் ஆசிரியப் பெருமக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து