முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1.45 மணி நேரம் பட்ஜெட்டை வாசித்ததுதான் சாதனை; விவசாயிகளுக்கு நன்மை இல்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      தமிழகம்
EPS 2023-02-23

சென்னை,  கிட்டத்தட்ட 1.45 மணி நேரம் விவசாய பட்ஜெட்டை வாசித்து சாதனை படைத்திருக்கிறார்கள். வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நன்மை எதுவும் இல்லை” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில்  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  தி.மு.க. -வினர் விவசாயிகளை ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்பதற்கு பொருத்தமான, உதாரணமான விவசாய பட்ஜெட் இது. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் என்றுகூறி, ஏதோ தனி பட்ஜெட் போட்டால், விவசாயிகள் வளர்ந்து, செழித்து வளமாக வாழ்வோம் என விவசாயிகள் கனவு கண்டனர். ஆனால், அது ஒரு போலித் தோற்றம் என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது.

 விவசாய பட்ஜெட் என்ற பெயரில் கிட்டத்தட்ட 1.45 மணி நேரம் விவசாய பட்ஜெட்டை வாசித்து சாதனை படைத்திருக்கிறார்கள். அதுதான் தமிழக வேளாண் பட்ஜெட்டின் சாதனை. இந்த விவசாய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நன்மை எதுவும் இல்லை. ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது. வேளாண்துறையைச் சாரந்த ஊரக வளர்ச்சித் துறை, பட்டு வளர்ச்சித் துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை, கூட்டுறவுத்துறை, மீன்வளத்துறை, வருவாய்த்துறை, தொழில்துறை, மின்சாரத்துறை, நீர்வளத்துறை அனைத்தையும் கலந்து ஒரு அவியல் போல வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய திட்டமோ, நன்மையோ இல்லை. அதி.மு.க.  ஆட்சியில், உணவு பதப்படுத்தும் பூங்கா, உழவர் உற்பத்திக் குழு போன்றத் திட்டங்களை தி.மு.க.  அரசு கைவிட்டுவிட்டது.  ஆர்கானிக் ஃபார்மிங் என ஒரு துறைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டது எல்லாம் நின்றுவிட்டது.  

தமிழகத்தில்  ஆண்டுதோறும் தி.மு.க.  ஆட்சியில் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. பயிர் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அரசு முன்வருவதில்லை. பயிர் இழப்பீடுகள் கிடைப்பதில்லை. குறுவை சாகுபடிக்கு தொடர்ந்து 3 ஆண்டுகளாக பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை” என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து