முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் - புதின் முக்கிய பேச்சுவார்த்தை

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      உலகம்
Trump-Putin 2024-11-11

மாஸ்கோ, உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.  

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி அதிதீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ரஷ்யா, உக்ரைனில் தனித்தனியாக அரசு முறை பயணம் மேற்கொண்ட அவர், இரு நாடுகளின் அதிபர்களிடமும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த தீவிரம் காட்டி வருகிறார். இதுதொடர்பாக சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 கடந்த 11-ம் தேதி அமெரிக்கா, உக்ரைன் அதிகாரிகள் ரியாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 30 நாட்கள் போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொண்டார்.  

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மாஸ்கோவில் கூறியதாவது: 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் போர் நிறுத்தத்தை அமல் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதுதொடர்பாக அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். இவ்வாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விக்கோப், மாஸ்கோவில்  ரஷ்ய அதிபர் புதினை ரகசியமாக சந்தித்துப் பேசினார். அப்போது 30 நாட்கள் போர் நிறுத்தம் தொடர்பாக இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, சிறப்பு தூதர் ஸ்டீவ் விக்கோப் சந்தித்து நீண்ட நேரம் விவாதித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து