முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடியேற்றத்துடன் திருவாரூர் கோயில் பங்குனிப் பெருவிழா தொடங்கியது

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      ஆன்மிகம்
Thyagarajar 2024-01-30

Source: provided

திருவாரூர் : திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனிப் பெருவிழாவுக்கான கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. இந்த பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் வரும் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாவும் திகழ்கிறது. பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி அளிப்பதுடன், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்து விளங்குகிறது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலமாகும்.

இந்தகைய சிறப்புமிக்க கோயிலில் பங்குனி உத்திரப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக உற்சவ கொடியுடன் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சந்திரசேகரர்,  தருனேந்தசேகரி, சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் 4 வீதிகளிலும் உலா வந்து தியாகராஜர் கோயிலை வந்தடைந்து, 54 அடி உயரம் உள்ள கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர்.

அங்கு சிறப்பு யாகபூஜையுடன், 54 அடி உயரமுள்ள கொடி மரத்துக்கு சந்தனம், பால், பன்னீர், மஞ்சள். பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மாலை அணிவிக்கபட்டது. அதனை தொடர்ந்து உற்சவ கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மங்கள இசையுடன் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் நந்தி உருவம் பொறித்த, 30 மீட்டர் நீளமுடைய உற்சவ கொடி ,கொடி மரத்தில் ஏற்றப்பட்டு தீபாரதணை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக ஆழி தேரோட்ட விழா அடுத்த மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது. அது நாள் வரை ஒவ்வொரு நாளும் தியாகராஜ சுவாமி கோயிலில் உற்சவங்கள் நடைபெறும். சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து