முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      இந்தியா
Gun 2023 04 17

Source: provided

ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவின் எல்லை மாவட்டமான ஹந்த்வாராவில் உள்ள ஜசல்தாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, திங்கள்கிழமை காவல்துறை மற்றும் பாதுகாப்புப்படையின் கூட்டுக் குழு அங்கு சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. உடனே பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல் தொடுத்தனர். அடுத்தடுத்த துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் காவலர் ஒருவரும் காயமடைந்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்த கூடுதல் படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். இரண்டு முதல் மூன்று பயரங்கரவாதிகள் அந்தப் பகுதியில் சிக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து