எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : எங்கள் மடியில் கனம் இல்லை, அதனால் வழியில் பயம் இல்லை. என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது;- மாற்றுக் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை ஏவி பா.ஜ.க. அரசு பழிவாங்குகிறது. அமலாக்கத்துறையை ஒரு கருவியாக பா.ஜ.க. பயன்படுத்துகிறது.
அமலாக்கத்துறை சோதனை நடத்தி இத்தனை நாட்களாகியும், இதுவரை ரூ.1,000 முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான எந்த ஆதாரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை. இந்த குற்றச்சாட்டுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவாக மறுத்துள்ளார்.
டெல்லி பாணியில் தமிழகத்தில் அரசியல் செய்துவிடலாம் என பா.ஜ.க. கனவு கண்டு கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள். எனவே, இங்கு பா.ஜ.க.வின் பாய்ச்சல் செல்லுபடி ஆகாது. நமது பிள்ளைகளின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, இந்தி திணிப்பை வலியுறுத்தி பா.ஜ.க. அரசு நமக்கு தர மறுக்கிறது. இதையெல்லாம் கண்டித்து தமிழ்நாட்டில் இருக்கும் பா.ஜ.க., தமிழக மக்களின் நலனுக்காக போராட தயாராக இருக்கிறதா?
அமலாக்கத்துறையை பழிவாங்கும் செயல்களுக்காக பயன்படுத்துகிறார்களே தவிர, அவர்களால் எந்த குற்றச்சாட்டும் கூற முடியாது. எங்கள் மடியில் கனம் இல்லை, அதனால் வழியில் பயம் இல்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த தவறுக்கும் இடம் கொடுக்க மாட்டார்." இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


