எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் முறையில் தோல்வி அடைந்தது. அ.தி.மு.க. கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டப்பேரவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை பேச அனுமதிப்பது இல்லை, அவர்கள் பேசும்போது சபாநாயகர் அப்பாவு அடிக்கடி குறுக்கீடு செய்கிறார், ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சபாநாயகரே பதில் கூறுகிறார், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை நேரலையில் ஒளிப்பரப்புவுது இல்லை, சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கொண்டு வந்தார்.
ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆதரவு: சட்டப்பேரவை விதிகளின்படி, இந்த தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள 35 எம்.எல்.ஏக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ செங்கோட்டையனும் எழுந்து நின்று தனது ஆதரவைத் தெரிவித்தார். அதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
அப்பாவு வெளியேறினார்...
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதைத் தெடர்ந்து, அவையிலிருந்து அப்பாவு வெளியேறினார். இதையடுத்து, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவையை வழிநடத்தினார்.
இ.பி.எஸ். குற்றச்சாட்டு:
இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசுகையில், “திமுக தங்களுடைய தேர்தல் அறிக்கையில், ஆண்டுக்கு நூறு நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தனர். அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் 400 நாட்கள் சட்டப்பேரவை நடந்திருக்க வேண்டும். ஆனால் 116 நாட்கள் மட்டுமே தமிழக சட்டமன்றம் நடைபெற்றுள்ளது. மேலும், அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தின்போதும், எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகளைக் கேட்பதில்லை. ஒரே நாளில் 4 துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடத்தப்படுகிறது” என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.
தீர்மானம் தோல்வி:
தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் நடத்தப்பட்டது. தீர்மானத்துக்கு தி.மு.க. கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க. எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவாதத்தில், பாஜக, பாமக உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. குரல் வாக்கெடுப்பில் இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
டிவிஷன் முறை எண்ணிக்கை...
எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்று, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது எண்ணிக்கை முறையிலான வாக்கெடுப்பு ஆகும். சட்டப்பேரவையில் மொத்தம் 6 டிவிஷன்கள் உள்ளன. டிவிஷன் வாரியாக இந்த தீர்மானத்தை எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்ற எண்ணிக்கை அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்படி சட்டப்பேரவை செயலர் முன்நின்று இந்த டிவிஷன் வாக்கெடுப்பை நடத்தினார். டிவிஷன் முறையிலும் சபாநாயகர் மீது அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. சபாநாயகர் மீது அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 63 பேர் ஆதரவளித்திருந்த நிலையில், 154 பேர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால், சட்டப்பேரவையில் அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இதனால், சபாநாயகரை நீக்கக்கோரி அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு மீண்டும் சபாநாயகர் இருக்கையில் வந்தமர்ந்து, அடுத்த அலுவல்களை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார். இனி தொடர்ந்து அவர் வழக்கம்போல் அவையை வழிநடத்துவார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-11-2025.
04 Nov 2025 -
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
04 Nov 2025பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல் 6 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்
04 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
-
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.
-
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்
04 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் நேரில் ஆஜராகினர்.
-
த.வெ.க.வில் 2,827 பேருக்கு பொறுப்பு
04 Nov 2025சென்னை: 2,827 த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
திருப்பூரில் பரபரப்பு சம்பவம்: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
04 Nov 2025திருப்பூர்: திருப்பூரில் நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
-
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் நிதி - தேஜஸ்வி யாதவ் உறுதி
04 Nov 2025பாட்னா, இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
-
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
-
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
-
சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி: பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை என்ன?
04 Nov 2025சென்னை: சிறப்பு வாக்காளர் திருத்தப்பணியின் போது பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியது
04 Nov 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கியது.
-
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
காரைக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில்
04 Nov 2025சென்னை: காரைக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
என்னை சீண்ட வேண்டாம்: அன்புமணிக்கு அருள் எம்.எல்.ஏ. எச்சரிக்கை
04 Nov 2025சேலம், அன்புமணி பற்றிய பல உண்மைகள் தெரியும் என்று தெரிவித்துள்ள பா.ம.க. எம்.எல்.ஏ.
-
என்னை கொலை செய்ய முயற்சி: பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு புகார்
04 Nov 2025சேலம், அன்புமணியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை பா.ம.க. எம்.எல்.ஏ., அருள் முன்வைத்துள்ளார்.
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.


