முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதி, மத மோதலை தூண்டும் புகைப்படங்கள்: தூத்துக்குடி, நெல்லை எஸ்.பி.க்கள் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      தமிழகம்
social-media

Source: provided

தூத்துக்குடி: சாதி, மத ரீதியான மோதலை தூண்டும் வகையில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடக்கூடாது என தூத்துக்குடி, நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கள் எச்சரித்துள்ளனர்.

மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல் துறையினர் பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில்  பாலியல் குற்றங்கள், சாதி, மத ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்கள் அல்லது செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு போன்றவை குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் கடந்த 6 மாதங்களில் மட்டும் சமூக வலைத்தளங்களில் இதுபோன்று பதிவிட்டதாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம், சீவலப்பேரி, அலங்காரப்பேரி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மாரிசங்கர்(வயது 19) என்பவர் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினையைத் தூண்டும் வகையில் அரிவாளுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பரப்பியதாக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து