முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையில் பயங்கரம்: ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டி படுகொலை

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      தமிழகம்
Murder 2023-07-06

Source: provided

நெல்லை: நெல்லை மாநகரில் வசித்து வந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசைன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை டவுண் காட்சி மண்டம் அருகே ரம்ஜான் நோன்பை ஒட்டி தொழுகை முடிந்து வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வெட்டிவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜாகீர் உசைனின் உடலை கைப்பற்றிய நெல்லை டவுண் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்படுள்ளநிலையில், நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் கீதா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக வக்பு வாரியத்துக்கு சொந்தமான 32 சென்ட் இடம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு காவல் நிலையம் மற்றும் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வரும்நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து