எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25-ம் தேதி வரை எந்த மேல்நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு மனுவுக்கு பதிலளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதனானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத் துறை இதுபோல சோதனை நடத்தியது. மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. அதன்படி விசாரணைக்கு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாநில அரசு அனுமதி பெற்றுதான் சோதனை நடத்த வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமலாக்க துறையின் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட்டு கோரிக்கை வைக்காமல் பொத்தாம் பொதுவாக கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். மேலும், அதனை திருத்தம் செய்து புதிய மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
தொடர்ந்து டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, “சோதனை நடத்தும் போது, அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். எந்தத் தகவலும் தெரிவிக்காமல் அலுவலகத்துக்குள் நுழைந்து அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
மேலும், “60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்க துறையினர் சிறை பிடித்தனர். இது அதிகாரிகளின் தனிநபர் சுதந்திரத்துக்கு விரோதமானது.” என்றார். அரசு தலைமை வழக்கறிஞர், "பெண் அதிகாரிகள் காலை 11 மணி முதல் நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர். அதிகாலை 1 மணிக்கு சிலரை வெளியில் செல்ல அனுமதித்து விட்டு காலை 8 மணிக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்" என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், டாஸ்மாக் அலுவலகம் சென்றதற்கான காரணங்களை அமலாக்கத் துறை தெரிவித்திருக்க வேண்டும் என்றுக்கூறி இரவில் ஏன் சோதனை நடத்தப்பட்டது என அமலாக்கத் துறைக்கு கேள்வி எழுப்பினர். இதை மறுத்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இரவில் சோதனை நடத்தப்படவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர் என விளக்கமளித்தார்.
ஆனால், “பொய் சொல்ல வேண்டாம். அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது.” எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அமலாக்க துறை தனது அதிகாரத்தை செயல்படுத்திய விதத்தை தான் கேள்வி எழுப்புகிறோம் எனக் கூறி, அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், எந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது என்பது குறித்த விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்பு
12 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –12-01-2026
12 Jan 2026 -
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா...? டாக்டர் ராமதாஸ் பதில்
12 Jan 2026சென்னை, சென்னையில் பா.ம.க.
-
பாதையைவிட்டு விலகியது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இஸ்ரோ தலைவர் தகவல்
12 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.
-
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
12 Jan 2026மதுரை, பாலமேட்டில் வருகிற 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது.
-
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மர்மநபர்களால் ஒருவர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Jan 2026சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில் ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொ
-
கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை
12 Jan 2026சென்னை, நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
போராட்டத்தின் போது கைதான ஆசிரியர்களை உடனே விடுவிக்க அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Jan 2026சென்னை, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
ஜனநாயகன் சென்சார் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் படக்குழு அப்பீல்
12 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
-
கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல் முடிவு செய்வார்கள்: செல்வப்பெருந்தகை
12 Jan 2026சென்னை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் க
-
45 சவரன் நகையைக் கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
12 Jan 2026சென்னை, தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
-
மத்திய அரசை கண்டித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம்
12 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினார்.
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


