முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாக்பூர் வன்முறை குற்றவாளிகளை பிடிக்க 18 சிறப்பு குழுக்கள்: காவல்துறை தகவல்

வியாழக்கிழமை, 20 மார்ச் 2025      இந்தியா
Nagpur

Source: provided

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரத்தில் நடந்த வன்முறையில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 18 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முகலாய அரசர் அவுரங்கசீப் சமாதியை இடமாற்றம் செய்வது தொடர்பாக நாக்பூரில் இரு சமூகத்தினரிடையே திங்கள்கிழமை வன்முறை மூண்டது. இதில், 33 காவல் துறை அதிகாரிகள் உட்பட 38 பேர் காயமடைந்தனர்.   நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறை தொடர்பாக இதுவரை 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் மூன்றாவது நாளாக நேற்றும் ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த வன்முறை தொடர்பாக போலீஸார் இதுவரை 200 பேரை அடையாளம் கண்டுள்ளனர்,  கலவரத்தின் போது பதிவான சி.சி.டிவி. காட்சிகளுடன் பிறரை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க 18 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள 69 பேரில், சிறுபான்மை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பகீம் கான் என்பவரும் ஒருவர். நாக்பூர் காவல் நிலையத்துக்கு முன்பு நடந்த போராட்டத்துக்கு கான் தலைமை தாங்கினார் என்று போலீஸார் தெரிவித்திருந்தனர். கான் தலைமையில் 50- 60 பேர் கணேஷ்பேத் காவல் நிலையத்துக்கு முன்பாக சட்டவிரோதமாகக் கூடி, விஷ்வ இந்து பரிஷித் போராட்டத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து கானும் இன்னும் 8 பேரும் பஹல்தார்புரா பகுதிக்குச் சென்றனர். அங்குள்ள சிவாஜி மகாராஜா சவுக்கில் ஏற்கெனவே சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த 500 பேர் கூடியிருந்தனர்.” என்று வழக்கு தொடர்பான முதல்தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து