எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: மருதமலை கோவிலில் மிகப்பெரிய பிரமாண்ட முருகர் சிலை அமைக்கப்பட உள்ளது என்று சட்டப்பேரவைியல் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, "கோவை வடக்கு தொகுதியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படுமா" என்று அம்மன் கே.அர்ஜூனன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, "நேற்று (நேற்று முன்தினம்) கோபமாக இருந்த அம்மன் அர்ஜுனனுக்கு இன்று (நேற்று) குளுமையான பதிலை தருகிறேன். எதிர்காலத்தில் கோவை வடக்கு தொகுதியில் நிச்சயம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மருதமலை கோவிலில் ரூ.37 கோடியில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மருதமலை கோவிலில் உலகமே வியக்கும் வகையில் பிரம்மாண்ட முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 547 சிவ திருத்தலங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், சூலூர் தொகுதியில் செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலுக்கு திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கபடுமா என்று சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சூலூர் தொகுதியில் மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலுக்கு ரூ.1 கோடி செலவில் திருமண மண்டபம் கட்டும் பணி 3 மாதத்தில் தொடங்கப்படும் என்றும், உறுதியாக 3 மாதத்தில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், வைத்தியநாதர் கோவில் திருப்பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும், மீதம் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


