முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முறைகேடாக நியமனம்: பீகாரில் 33 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      இந்தியா
bihar-high-court

கோபால்கஞ்ச், பீகாரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 33 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

பீகாரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் ஆசிரியர் பணிக்கு புதிதாக 33 பேர் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், இந்த பணி நியமனம் முறைகேடாக நடந்துள்ளது என விசாரணையில் தெரிய வந்ததும் அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதுபற்றி மாவட்ட கல்வி அதிகாரியான யோகேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, 2010-ம் ஆண்டுக்கு பின்னர் புதிதாக 33 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், இதற்கு முன் அந்த பதவிகளை வகித்து வந்தவர்கள், பணி ஓய்வு பெறவோ அல்லது மரணம் அடையவோ இல்லை. அந்த பதவிகள் காலியாகி விட்டன என முறைப்படி அறிவிக்கப்படவும் இல்லை.

இந்த சூழலில், பணியிடங்கள் காலி என மாவட்ட மேல்முறையீட்டு ஆணையம் அறிவித்து, அவற்றில் 33 ஆசிரியர்களை பணியில் அமர்த்தியது. இந்த உத்தரவுக்கு எதிராக மாவட்ட கல்வி அதிகாரி சார்பில் மாநில மேல்முறையீட்டு ஆணையத்திடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீது நடந்த விசாரணையில், அந்த ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள தொகையை திரும்ப பெறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து அந்த ஆசிரியர்கள் ஐகோர்ட்டுக்கு சென்றனர். எனினும், மாநில மேல்முறையீட்டு ஆணையத்துக்கு ஆதரவாக, ஆணையம் அளித்த உத்தரவை ஐகோர்ட்டு உறுதி செய்தது. இதன் தொடர்ச்சியாக, ஆசிரியர் பணியிடங்களில் முறைகேடாக பணியமர்த்தப்பட்ட 33 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து