முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமகிருஷ்ண மடத்தில் புதுப்பிக்கப்பட்ட பல் மருத்துவ மையம் தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2025      தமிழகம்
Ma Supra 2025-03-22

Source: provided

சென்னை : ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தர்ம வைத்தியசாலையில் புதிதாக விவேகானந்தா மருந்தக த்தையும், புதுப்பிக்கப்பட்ட சாரதா பல் மருத்துவ மையத்தையும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

சென்னை ஸ்ரீராமகிருஷ்ண  மடத்தின் முக்கிய சேவைகளுள் ஒன்றான தர்ம வைத்தியசாலை, 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு, பல் மருத்துவம், மகப்பேறு  உள்ளிட்டவைகளுக்கு  ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 இந்நிலையில், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தர்ம வைத்தியசாலை தொடங்கி  நூற்றாண்டு விழாவையொட்டி, புதிதாக மருந்தகம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட  பல் மருத்துவ மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ண மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகாராஜ், தொழிலதிபர் டாக்டர் நல்லி குப்புசாமி, ராமச்சந்திரா நிகர்நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் உமா சேகர், பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் அறங்காவலர் ஞானவரதானந்தாஜி மகராஜ், பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை வேந்தர் ஆத்ம பிரியானந்தாஜி மகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,  தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சிறந்து விளங்குவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தர்ம வைத்தியசாலை அடித்தளமாக அமைந்திருக்கிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளின் இணையற்ற மருத்துவ சேவையால் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு உயர்ந்து வருகிறது,’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து