முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் மகனை கொன்று தற்கொலைக்கு முயன்ற இந்திய பெண்

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2025      உலகம்
USA 2025-03-22

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் மகனை கொன்று இந்திய பெண்  தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் பிரகாஷ் ராஜு. இவரது மனைவி சரிதா (வயது 48). இந்த தம்பதிக்கு எதின் ராமராஜு (வயது 11) என்ற மகன் இருந்தார். மூவரும் குடும்பத்துடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஆரஞ்ச் நகரில் வசித்து வந்தனர். இதனிடையே, சரிதாவுக்கும் அவரது கணவர் பிரகாஜ் ராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக 2018ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் மகன் யார் பொறுப்பில் இருப்பது என்பதில் பிரகாஷ் ராஜுவுக்கும், சரிதாவுக்கும் இடையே ஓராண்டுக்குமேல் மோதல் போக்கு நிலவி வந்துள்ளது. மகனின் மருத்துவம், கல்வி தொடர்பான விஷயங்களில் தன்னை கேட்காமல் பிரகாஷ் முடிவெடிப்பதாகவும், மேலும் அவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாகவும் சரிதா குற்றஞ்சாட்டி வந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பிரகாஷ் மறுத்துள்ளார்.

இந்நிலையில், மகனை தன்னுடன் 3 நாட்கள் வைத்துக்கொள்ள கோர்ட்டில் சரிதா அனுமதி பெற்றுள்ளார்.  அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்ததால் மகனை மறுநாள் (19 ம் தேதி) முன்னாள் கணவரிடம் ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தது.

கணவருடனான பிரச்சினை, மகனை மீண்டும் பிரிந்து இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் ஆத்திரமடைந்த சரிதா அங்கிருந்த கத்தியை கொண்டு மகன் எதின் ராமராஜுவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் எதின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். பின்னர், தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட சரிதா தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதேவேளை, தூக்கு மாத்திரைகளை உட்கொண்ட பின் போலீசாருக்கு போன் செய்த சரிதா, மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த ஓட்டலில் எதின் ராமராஜு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தான். சிறுவனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தூக்க மாத்திரைகள் சாப்பிடதில் மயங்கிய நிலையில் கிடந்த சரிதாவை மீட்ட போலீசார் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின் குணமடைந்த சரிதா கைது செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து