எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐதராபாத்: ராஜஸ்தானை வீழ்த்தி ஐதராபாத் அணி தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது. ஐதராபாத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐ.பி.எல். திருவிழா...
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்படி மாலை 3.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது .
ஹெட் அரைசதம்...
தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடியாக விளையாடினர் . அபிஷேக் சர்மா 24 ரன்களில் வெளியேறினார் . பின்னர் வந்த இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார் .ஹெட் , இஷான் கிஷன் இருவரும் இணைந்து பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடி காட்டிய ஹெட் அரைசதமடித்து 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இஷான் கிஷன் சதம்...
தொடர்ந்து களமிறங்கிய நிதிஸ் குமார் ரெட்டி 30 ரன்களில் வெளியேறினார் தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன் அதிரடி காட்டினார். அவர் 34 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஐதராபாத் அணி 286 ரன்கள் எடுத்தது.
சாம்சன், ஜுரெல் அபாரம்...
இதையடுத்து 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களம் கண்டது. ராஜஸ்தானின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் களம் இறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 1 ரன்னிலும், அடுத்து வந்த ரியான் பராக் 4 ரன்னிலும், நிதிஷ் ராணா 11 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து சாம்சனுடன், துருவ் ஜுரெல் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
ஐதராபாத் வெற்றி...
இதில் சாம்சன் 66 ரன்னிலும், துருவ் ஜுரெல் 70 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து ஷிம்ரன் ஹெட்மையர் மற்றும் சுபம் துபே ஜோடி சேர்ந்தனர். இதில் ஹெட்மையர் 42 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 242 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 44 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக துருவ் ஜுரெல் 70 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் சிமர்ஜித் சிங், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


