முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை: தலைமறைவான பெண்ணை பிடிக்க தனிப்படை அமைப்பு

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      தமிழகம்
Police 2024 08 12

Source: provided

நெல்லை : நெல்லையில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தலைமறைவான பெண்ணை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் இடப்பிரச்சினையில் கடந்த 18-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையில் தொடர்புடைய டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், அவரது மைத்துனர் அக்பர் ஷா மற்றும் நோட்டமிட்டு தகவல் தெரிவித்த 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்திருந்தனர். தலைமறைவான கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷாவை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நூர்நிஷாவின் மற்றொரு சகோதரர் பீர் முகம்மதுவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று அதிகாலை ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழு கையை முடித்துவிட்டு வெளியே வருவதை நோட்டமிட்டு கொலை யாளிகளுக்கு தகவல் அளிப்பதற்காக காத்திருந்த 16 வயது சிறுவனுக்கு தனது மோட்டார் சைக்கிளை வழங்கியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இதனால் கொலையில் பீர்முகமதுவுக்கு நேரடியாக தொடர்பு இல்லையென்றாலும், கொலை சம்பவம் நடக்கப்போவது தெரிந்தும் போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமல் இருந்ததாக கூறி போலீசார் அவரையும் இந்த வழக்கில் சேர்த்து கைது செய்துள்ளனர். இதுவரை 5 பேர் இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே தலைமறை வாக உள்ள நூர்நிஷாவை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனாலும் அந்த தேடுதல் வேட்டையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கொலையில் தொடர்புடை யவர் பெண் என்பதால் சகஜமாக சந்தேகப்படும் வீடுகளுக்குள் சென்று தேட முடியவில்லை. இதனையடுத்து தனிப்படையில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர், ஒரு பெண் போலீஸ் சேர்ந்து, நூர்நிஷாவை தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து