Idhayam Matrimony

வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய அப்பீல் மனு தள்ளுபடி : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து பாரத் இந்து முன்னணி அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி, பாரத் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், திருப்பரங்குன்றம் மலை உரிமை தொடர்பான பிரச்சினைக்கு ஏற்கெனவே தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், ஊர்வலம் நடத்தி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த போராட்டத்திற்கும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அனுமதி வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து பாரத் இந்து முன்னணி அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பேலா எம் திரிவேதி, பி பி. வாரலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சரியானதே என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து