Idhayam Matrimony

ஒடிசாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் பணிநீக்கம்

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      இந்தியா
Odisha-Assembly 2024-08-23

ஒடிசா, ஊழலில் ஈடுபட்டதற்காகக் கடந்த 5 ஆண்டுகளில் 120 அரசு அதிகாரிகள் மற்றும் 39 அதிகாரிகள் கட்டாய ஓய்வு அளித்துள்ளதாக ஒடிசா அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் துருபா சரண் சாஹூவின் கேள்விக்கு ஒடிசா முதல்வர் சரண் மாஜீ எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 120 அரசு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 2024-24-க்கு இடையில் ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகளை வாங்கியதற்காகவும் 39 அதிகாரிகள் கட்டாய ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 

மேலும், அரசு அதிகாரிகளிடமிருந்து ரூ.59.47 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்துள்ளது என்று அவர் கூறினார். ஆண்டுவாரியான விவரத்தை அளித்த முதல்வர், 2023ல் 31 அரசு அதிகாரிகளும், 2024-ல் 30 பேரும், 2020-ல் 27 பேரும், 2021 மற்றும் 2022ல் தலா 16 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 2021-ல் 23 அதிகாரிகளுக்கும், 2022-ல் 13 பேருக்கும், 2020, 2023 மற்றும் 2024-ல் தலா மூன்று பேருக்கும் முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து