முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இது வெறும் ட்ரைலர் தான்: கோலி, சால்ட் ஆட்டம் குறித்து ரெய்னா கருத்து

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      விளையாட்டு
Sai-Sudarsan 2024-10-18

Source: provided

புதுடெல்லி : முதல் போட்டியில் விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் விளையாடியது ஒரு டிரைலர் தான் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

18வது சீசன்... 

ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

பலமான அணி...

இந்த தொடரில் தற்போது வரை 4 லீக் ஆட்டங்கள் மட்டுமே முடிந்துள்ளன. இந்தமுறை பல முன்னணி வீரர்கள் அணி மாறியுள்ளதால், எந்த அணி பலமான அணியாக இருக்கும்? எந்தெந்த வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடுவார்கள்? எந்த அணி அதிக வெற்றிகளை குவிக்கும்? என்பது போன்ற பல்வேறு விவாதங்களும் தற்போது சமூக வலைதளத்தில் நடைபெற்று வருகின்றன.

200+ ரன்கள்...

கடந்த ஐ.பி.எல் தொடரில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஐதராபாத் அணி மிக எளிதாக ஒரு இன்னிங்சில் 200+ ரன்களை குவித்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அவர்களது தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா தான். அபிஷேக் மற்றும் ஹெட் ஆட்டத்தில் முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அந்த அணி மிக எளிதாக ரன்கள் குவிக்கிறது.

ஆபத்தான ஜோடி...

இதன் காரணமாக அந்த அணி வீரர்களுக்கு பந்துவீச எதிரணி வீரர்கள் தடுமாறுகிறார்கள். அபிஷேக்-ஹெட் இணை எதிரணிக்கு மிக ஆபத்தான தொடக்க வீரர்களாக திகழ்கிறார்கள். இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் தொடருக்கான ஆபத்தான தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஜோடிதான் திகழ்வார்கள் என சி.எஸ்.கே முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

டிரைலர் தான்...

முதல் போட்டியில் விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் விளையாடியது ஒரு டிரைலர் தான். இனிமேல் அவர்கள் இன்னும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இப்படியே சென்றால் இந்த தொடரின் மிகவும் ஆபத்தான (டேஞ்சரான) தொடக்க ஜோடி இவர்களாகத்தான் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து