முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹூசைனியின் மறைவுக்கு ஆந்திர துணை முதலவர் பவன் கல்யாண் இறங்கல்

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      இந்தியா
Hussaini-2025-03-25

சென்னை, கராத்தே பயிற்சியாளர் ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கராத்தே, வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹூசைனியின் மறைவுக்கு ஆந்திர துணை முதல்-மந்திரியும், நடிகருமான பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

தற்காப்புக் கலை ஆசிரியரின் மரணம் மனவேதனை அளிக்கிறது. புகழ்பெற்ற தற்காப்புக் கலை மற்றும் வில்வித்தை பயிற்றுவிப்பாளர் ஷிஹான் (சிகான்) ஹூசைனி காலமானார் என்பதை அறிந்து நான் மனவேதனை அடைந்தேன். நான் அவரிடம் கராத்தே பயிற்சி பெற்றேன். தற்காப்புக் கலை குரு ஹூசைனி உடல்நிலை சரியில்லாமல் இருப்பது நான்கு நாட்களுக்கு முன்புதான் தெரியவந்தது. சென்னையில் உள்ள எனது நண்பர்கள் மூலம் விசாரித்து... சிறந்த சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அனுப்ப வேண்டியிருந்தால், நான் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வேன் என்று கூறினேன். இந்த மாதம் 29ம் தேதி சென்னை சென்று ஹூசைனியைப் பார்க்க முடிவு செய்திருந்தேன். இதற்கிடையில், அவரின் இறப்பு செய்தியை கேட்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சென்னையில், ஹூசைனி மிகவும் கடுமையான விதிகள் மற்றும் விதிமுறைகளுடன் கராத்தே கற்றுக் கொடுத்தார். அவர் சொன்னதை நான் 100 சதவீதம் பின்பற்றுவேன். முதலில், அவர் கராத்தே கற்பிக்க ஒப்புக்கொள்ளவில்லை. ''நான் தற்பொழுது யாருக்கும் பயிற்சி அளிப்பதில்லை. என்னால் உனக்கு பயிற்சி அளிக்க முடியாது'' என்று அவர் கூறினார். ஆனால், விடாமுயற்சியாக நான் பலமுறை வேண்டிய பிறகு, அவர் ஒப்புக்கொண்டார். நான் அதிகாலையில் சென்று மாலை வரை அவருடன் தங்கி, கராத்தேவில் 'பிளாக் பெல்ட்' பெற பயிற்சி பெற்றேன். 

அப்போது நான் கற்ற பாடங்கள் அனைத்தும், நான் 'தம்முடு' படத்தில் கிக் பாக்ஸராக நடிக்க பெரிதாக உதவியது. ஹூசைனியின் பயிற்சியின் கீழ் சுமார் மூவாயிரம் பேர் பிளாக் பெல்ட் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் வில்வித்தை விளையாட்டைப் பிரபலப்படுத்த ஹூசைனி பாடுபட்டார். ஹூசைனியின் திறமைகள், தற்காப்புக் கலைகள் மற்றும் வில்வித்தை ஆகிய துறைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவர் ஒரு பன்முகத் திறமைசாலி. அவர் இசையில் தேர்ச்சி பெற்றவர். நல்ல ஓவியர் மற்றும் சிற்பி. அவர் பல படங்களில் நடித்தார். அவர் ஊக்கமளிக்கும் உரைகளை வழங்கினார்.

சென்னை ரோட்டரி கிளப் மற்றும் பிற மாநாட்டு அரங்குகளில் உரை நிகழ்த்தச் செல்லும்போது என்னை தன்னுடன் அழைத்துச் செல்வார். பன்முகத் திறமை கொண்ட ஹூசைனி, இளைஞர்களுக்கு தற்காப்புக் கலைகளை இன்னும் எளிதாகக் கிடைக்கச் செய்ய விரும்பினார். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்படும் என்ற அறிவிப்பு அவரது நல்ல மனநிலையை வெளிப்படுத்தியது. ஹூசைனியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து