எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
மக்களவையில் தனக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், சபை "ஜனநாயகமற்ற" முறையில் நடத்தப்படுகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சபாநாயகர் தன்னைப் பற்றிக் கருத்துத் தெரிவித்ததாகவும், தான் பேச வாய்ப்பளிக்காமல் சபையை ஒத்திவைத்ததாகவும், இதேபோல கடந்த வாரத்திலும் தனக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி கூறினார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சபையின் கண்ணியத்தை நிலைநிறுத்த உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து ராகுல் காந்தி இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். சபாநாயகர் இந்தக் கருத்தைச் சொல்ல என்ன காரணம் என்பது குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகோய், கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் மக்களவையில் கட்சியின் கொறடா மாணிக்கம் தாகூர் உட்பட சுமார் 70 காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள், மக்களவை சபாநாயகரைச் சந்தித்து, அவையில் ராகுல் காந்தி பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு எதிராக கேள்வி எழுப்பியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


