எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு பங்குனி திருவிழா கடந்த 3-ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வாகன சேவைகள் நடைபெறுகின்றன. வெள்ளி சூரிய பிரபை, வெள்ளி சந்திர பிரபை, வெள்ளி பூத வாகனம், நாக வாகனம், சவுடல் விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலை 6 மணியளவில் இறைவன் தேருக்கு எழுந்தருளினார். அதன்பின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். மாலையில் தேரில் இருந்து சுவாமி திருக்கோவிலுக்கு எழுந்தருள்கிறார். இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி அளவில் திருஞானசம்பந்த சுவாமிகள் எழுந்தருளல், என்பை பூம்பாவையாக்கி அருளல், தொடர்ந்து அன்று மாலை 3.30 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி நடக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


