முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      உலகம்
China 2024 07 31

Source: provided

சீனா : உலகின் மிக உயரமான பாலத்தை சீனா கட்டியுள்ளது.

சீனாவில் ஹியாஜியோங் கிராண்ட் கேன்யன் பாலம் வருகிற ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. இது ஒரு பெரிய பள்ளத்தாக்கின் குறுக்கே இரண்டு மைல்கள் நீளமுள்ள கட்டமைப்பு. 216 மில்லியன் பவுண்டுகள் (அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2200 கோடி) செலவில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தால் பெரிய பள்ளத்தாக்கை கடக்கும் பயண நேரம் ஒரு மணி நேரத்திலிருந்து ஒரு நிமிடமாகக் குறையும். ஈபிள் கோபுரத்தை விட 200 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட இந்தப் பாலம் ஒரு குறிப்பிடத்தக்க கட்டிடகலை சாதனையாகும். 

பாலத்தின் எகு டிரஸ்கள் சுமார் 22,000 மெட்ரிக் டன் எடை கொண்டவை. மூன்று ஈபிள் கோபுரங்களுக்குச் சமமான எடை கொண்ட இந்த எஃகு டிரஸ்கள் இரண்டே மாதங்களில் நிறுவப்பட்டன. சீனாவின் கிராமப்புறப் பகுதியில் முக்கியமான போக்குவரத்து இணைப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்தப் புதிய பாலம் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகவும் இருக்கும். 2016-ம் ஆண்டில், சீனாவின் மிக உயரமான பாலம் பெய்பன்ஜியாங்கில் கட்டப்பட்டது, இது வியக்கத்தக்க வகையில் 1,854 அடி உயரத்தில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து