எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: நடப்பு ஐ.பி.எல். சீசனின் புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள சி.எஸ்.கே., 1 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் 10-வது இடத்தில் உள்ளது.
ஐ.பி.எல். தொடர்...
18-வது ஐ.பி.எல். சீசன் கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. மொத்தம் 74 போட்டிகள். இதில் 70 ஆட்டங்கள் லீக் சுற்றில் நடைபெறுகிறது. குவாலிபையர் 1 மற்றும் 2, எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டி அடுத்த சுற்றில் நடைபெறும். புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கின்ற அணிகள் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
முதல் இடத்தில் டெல்லி...
அதனால் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. வெற்றி பெறுவது, அதற்கான புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் அணிகள் இடம்பெறும். அந்த வகையில் நடப்பு சீசனில் 4 ஆட்டங்களில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்றுள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள குஜராத் அணி ஆறு ஆட்டங்களில் விளையாடி நான்கு வெற்றிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள லக்னோவும் ஆறு ஆட்டங்களில் நான்கு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. ரன் ரேட் அடிப்படையில் முதல் மூன்று இடங்களில் அணிகள் இடம்பெற்றுள்ளன.
‘கம்பேக்’...
இதே போல கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் தலா ஆறு புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அந்த அணிகளும் ரன் ரேட் அடிப்படையில் தான் நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது இடங்களை பிடித்துள்ளன. ஏழு மற்றும் எட்டாவது இடத்தில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. 4 ஆட்டங்களில் தொடர் தோல்வியை தழுவிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை அதிரடி ஆட்டம் மூலம் வீழ்த்தி கடைசி இடத்தில் இருந்து 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ‘கம்பேக்’ என்றால் அது இப்படி இருக்க வேண்டும் என சொல்லும் வகையில் ஹைதராபாத்தின் ஆட்டம் அமைந்திருந்தது.
கடைசி இடத்தில்....
கடைசி இரண்டு இடங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற அணிகள் என அறியப்படும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளன. இரண்டு அணிகளும் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் சி.எஸ்.கே. கடைசி இடத்தில் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


