Idhayam Matrimony

நெருப்புடன் விளையாடாதீர்கள்: ஷேக் ஹசீனா கடும் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      உலகம்
Sheik-Hasina 2024 08 11

Source: provided

டாக்கா : நெருப்புடன் விளையாடினால், அதை உங்களையும் சேர்த்து எரித்து விடும் என்று ஷேக் ஹசீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் முதல் இந்தியாவில் தஞ்கம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா, அவ்வப்போது வீடியோ வாயிலாக தனது ஆதரவாளர்கள் மத்தியில்  உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நேற்றுமுன்தினம் அவர் பேசியதாவது:-

தனது அதிகாரப்பசிக்காக வெளிநாட்டு சக்திகளுடன் கை கோர்த்து தேசத்தை வீழ்ச்சி அடைய வைத்துள்ளார் முகம்மது யூனுஸ்.  வங்கதேசத்தின் சுதந்திர போராட்டம் தொடர்பான அனைத்து சின்னங்களும் அகற்றப்பட்டுள்ளன. சுதந்திர போராட்டக்காரர்கள் இழிவு படுத்தப்பட்டுள்ளார்கள். சுதந்திர போராட்டக்காரர்களின் நினைவுக்காக அனைத்து மாவட்டங்களிலும்  வளாகங்கள் கட்டுப்பட்டுள்ளன. ஆனால் அவைகள் எரிக்கப்பட்டுள்ளன. முகம்மது யூனுஸ் இதை நியாயப்படுத்துகிறாரா? நீங்கள் நெருப்புடன் விளையாடினால், அதை உங்களையும் சேர்த்து எரித்து விடும் அதிக அளவு கடன் வாங்கும் அந்த நபர், அதிகார பசி, பண பசிக்காக, வெளிநாட்டு பணத்தை வைத்து நாட்டை அழிக்கிறார். வங்கதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சியை சேர்ந்தவர்கள் அவாமி லீக் தலைவர்களை துன்புறுத்துகிறார்கள்" இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து