முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுடன் கூட்டணி: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆதங்கம்

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      தமிழகம்
ADMK 11-04-2025

Source: provided

திருப்பூர் : பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தம் அளிக்கிறது என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி, கண்டிப்பாக மீண்டும் அமையும் என அரசியல் நோக்கர்கள் பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர், தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இணைந்து போட்டியிடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில தினங்கள் முன் சென்னை வந்த அமித் ஷா, பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியை உறுதிப்படுத்தி அறிவித்தார்.

அதில், பா.ஜ.க. தலைவர்களும், அதிமுக தலைவர்களும் ஒன்றிணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியி ருக்கிறார்கள். அடுத்து வரப்போகிற தேர்தலை என்.டி.ஏ. கூட்டணியின் இதர கட்சிகளுடன் இணைந்து சந்திக்க இருக்கிறோம் என்பதை உங்களுக்கு அறிவிக்கிறேன். என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அ.திமு.க. முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் பேசுகையில்,பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இஸ்லாமியர்கள் வருத்தம் அடைய வேண்டாம், அ.தி.மு.க. என்றும் உங்களுடன் துணை நிற்கும் என்றார். இதே நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன் பேசுகையில், நாதழுதழுக்க குரல் உடைந்து, கட்சியை உடைக்க பார்க்கின்றனர், நிர்பந்தம் காரணமாக கூட்டணி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து