முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டில்லி அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை அணி

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      விளையாட்டு
Mumbai 2024-04-05

Source: provided

புதுடில்லி : நடப்பு ஐ.பி.எல். தொடரின் 29-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று.டில்லி அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

205 ரன் குவிப்பு...

டில்லி அருண் ஜெட்லி திடலில் நடைபெற்ற  மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டில்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்களைக் குவித்தது.

கருண் நாயர் விளாசல்...

அதனைத் தொடர்ந்து, பேட்டிங் செய்த டில்லி கேபிடல்ஸ் அணியில் ஜேக் ப்ராசெர்-மெக்கர்க் முதல் பந்திலேயே தீபக் சாஹர் பந்துவீச்சில் டக்-அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். எனினும், அடுத்து வந்த கருண் நாயர் சிக்ஸர்களையும் பௌண்டரிகளையும் விளாசி அதிரடியாக ரன் குவித்து, 40 பந்துகளில் 89 (5 சிக்ஸர், 12 பௌண்டரி) ரன்கள் திரட்டினார்.

மும்பை வெற்றி...

இதனால், டில்லி அணி வெற்றி பெற கடைசி 5 ஓவர்களில் 48 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து விக்கெட் விழ, டில்லியின் ரன் ரேட் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், 19-ஆவது ஓவரில் டில்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் டில்லி கேபிடல்ஸ் 193 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து