முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அணியில் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது இளம் வீரர் சேர்ப்பு

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      விளையாட்டு
Ayush-Mathre 2024-04-14

Source: provided

 சென்னை, : ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக மும்பையை சேர்ந்த 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவை சி.எஸ்.கே. நிர்வாகம் சென்னை அணியில் சேர்த்துள்ளது.

கெய்க்வாட் காயம்...

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக சென்னை அணியின் புதிய கேப்டனாக மகேந்திரசிங் தோனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆயுஷ் மாத்ரே...

இருப்பினும் சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக மாற்று வீரராக இடம்பெற போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. அதற்கு பிரித்வி ஷா உள்ளிட்ட பல வீரர்களின் பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக மும்பையை சேர்ந்த 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவை சி.எஸ்.கே. நிர்வாகம் சென்னை அணியில் சேர்த்துள்ளது. உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆயுஷ் மாத்ரே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ள மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை அணியுடன் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து