முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கம் பற்றி எரிகிறது, முதல்வர் அமைதி காக்கிறார்: யோகி கடும் தாக்கு

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      இந்தியா
Yogi 1

 ஹர்தோய் (உ.பி), மேற்கு வங்கம் பற்றி எரிகிறது. ஆனால், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியோ அமைதியாக இருக்கிறார்  என்று  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய முதல்வர் யோகி, "மேற்கு வங்கம் பற்றி எரிகிறது. மாநில முதல்வர் அமைதியாக இருக்கிறார். கலவரக்காரர்களை 'அமைதியின் தூதர்கள்' என்று அவர் அழைக்கிறார்.  அமைதியின்மையை உருவாக்க மதச்சார்பின்மை என்ற பெயரில், கலவரக்காரர்களுக்கு முழு சுதந்திரத்தையும் அவர்கள் வழங்கியுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக முழு முர்ஷிதாபாத்தும் தீப்பிடித்து வருகிறது. ஆனால் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது.  முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரம் குறித்து காங்கிரஸ் அமைதியாக உள்ளது. சமாஜ்வாதி கட்சியும் அமைதியாக உள்ளது. வக்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் ஏழை மக்களின் நிலம் சூறையாடப்படுவதை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது, ​​மீட்கப்பட்ட நிலம் மருத்துவமனைகள், ஏழைகளுக்கான வீடுகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைக் கட்டப் பயன்படுத்தப்படும். நிலம் கொள்ளையடிக்கப்படுவது முடிவுக்கு வந்துவிட்டது. அதனால்தான் இவர்கள் வருத்தமடைந்துள்ளனர்  என்று விமர்சித்துள்ளார்.

வங்கதேசத்தை ஒட்டிய, முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், 3 பேர் கொல்லப்பட்டவர், பலர் காயமடைந்தனர், பலரது சொத்துகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன. திரிணமூல் காங்கிரஸின் ஆதரவு காரணமாகவே போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு சிறுபான்மை இந்துக்களை தாக்கியதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து