முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை: மக்கள் அமைதி காக்க மம்தா வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      இந்தியா
Mamtha 2023-04-13

கொல்கத்தா, மாநிலத்தில் அமைதி நிலவ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், வன்முறை போராட்டங்கள் மூலம் பொறியில் சிக்காதீர்கள் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் துலியன் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதையடுத்து,  மாநிலத்தின் வேறு சில பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இதனிடையே, மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கரில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர், பல போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன.

 இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, “மதத்தின் பெயரால், மதத்துக்கு தொடர்பற்ற விளையாட்டுகளை யாரும் விளையாடக்கூடாது.  மனிதர்களை நேசிக்க வேண்டும் என்பதே அனைத்து மதங்களின் உயர்ந்த கருத்தாக உள்ளது. நாம் தனியாகப் பிறக்கிறோம், தனியாகவே இறக்கிறோம்; பிறகு ஏன் சண்டையிட வேண்டும்? கலவரங்கள், போர், அமைதியின்மை ஆகியவை எதற்கு?

அனுமதி பெற்று அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், யாராக இருந்தாலும் சரி, சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள அனுமதி கிடையாது.  யாராவது உங்களைத் தூண்டிவிட முயற்சிக்கும்போது, ​​பொறியில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், முர்ஷிதாபாத்தில் நிலைமை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும், கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு, இடம்பெயர்ந்த குடும்பங்கள் திரும்பி வரத் தொடங்கியுள்ளன என்றும் மேற்கு வங்க காவல்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து