எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, துப்பாக்கி கொடுப்பது என்கவுண்டர் செய்வதற்கு அல்ல. தற்காப்புக்கு தான் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது
திருச்சியை சேர்ந்த சத்யஜோதி என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது சகோதரர் வெள்ளைக்காளி தற்போது சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். சமீபத்தில் மதுரையில் கிளாமர் காளி என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கும் வெள்ளைக்காளிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், போலீசார் உள்நோக்கத்துடன் வெள்ளைக்காளியை இந்த வழக்கில் தொடர்புபடுத்தி உள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் என்பவர் சமீபத்தில் என்கவுன்ட்டரில் இறந்துவிட்டார். எனவே, வெள்ளைக்காளியையும் போலீசார் என்கவுன்ட்டர் செய்ய வாய்ப்புள்ளது. ஆகவே, அவரது விசாரணையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த மனு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், "தமிழ்நாட்டில் சமீபத்தில் என்கவுன்ட்டர்கள் அதிகரித்து உள்ளன. போலீஸ் அதிகாரிக்கு துப்பாக்கி கொடுத்திருப்பது என்கவுன்ட்டர் செய்வதற்கு அல்ல.. தற்காப்புக்கு தான். குற்றவாளிகளை காலுக்குக் கீழ் சுட்டுப்பிடியுங்கள்.. புழல் சிறையில் உள்ள வெள்ளை காளியை மதுரை திருமங்கலம் கோர்ட்டுக்கு அழைத்து வரும்போது அவருக்கு ஆபத்து ஏற்பட்டால், அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார். .
இதனிடையே அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இரண்டு போலீசாரை ரவுடிகள் கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


