எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, இந்த சீசனில் அதிக டாட் பந்துகளை வீசியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
கடைசி இடத்தில்...
நடப்பாண்டு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 2 இல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன. தற்போதைய சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கையாக இருப்பது வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது மற்றும் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது தான்.
திணறடிக்கும் கலீல்...
பவர்பிளேவில் எதிரணி வீரர்களை கலீல் திணறடிக்கும் நிலையில், மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி அதிக ரன்கள் போவதையும் தடுத்து வருகிறார் நூர். இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் நூர் அகமது (12) முதலிடத்திலும் கலீல் அகமது (11) இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்த நிலையில், அதிக டாட் பந்துகளை வீசியவர்கள் பட்டியலில் கலீல் அகமது தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 7 போட்டிகளில் 27 ஓவர்கள் வீசியுள்ள கலீல், 78 டாட் பந்துகளை வீசியுள்ளார். நூர் அகமது 57 பந்துகள் வீசி 13 ஆவது இடத்தில் உள்ளார்.
ஸ்டெய்ன் முதலிடத்தில்...
ஒரு ஐ.பி.எல். சீசனில் அதிக டாட் பந்துகள் வீசியவர்கள் பட்டியலில் டேல் ஸ்டெய்ன் முதலிடத்தில் உள்ளார். 2013 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்காக விளையாடிய இவர் 67.5 ஓவர்கள் வீசி 211 டாட் பந்துகள் போட்டு சாதனை படைத்துள்ளார். மேலும், ஐ.பி.எல். வரலாற்றில் அதிக டாட் பந்துகள் வீசியவர்கள் பட்டியலில் புவனேஷ் குமார் 1729 பந்துகள் வீசி முதலிடத்தில் நீடிக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


