முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      சினிமா
Bobby-Simha 2025-04-19

Source: provided

சென்னை : நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 3 பேர் காயமடைந்தனர்.

திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர், சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தினை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் 6-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் பெண் உள்பட மூவர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து பாபி சிம்ஹாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டு கார் ஓட்டுநர் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து புஷ்பராஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாபி சிம்ஹாவின் தந்தையை இறக்கிவிட்டு வீடு திரும்பும்போது ஓட்டுநர் மதுபோதையில் காரை இயக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கிண்டி போலீசார் விபத்து குறித்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து