எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ம.தி.மு.க.வின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ அறிவித்துள்ளது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. "நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும், அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் 'முதன்மைச் செயலாளர் "என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை. எனவே, கழகத்தின் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் மறுமலர்ச்சி தி.மு.க.வின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன். திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் என்ற முறையில் தன்னுடைய தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி பொறுப்பில் இருந்து விலகும் துரை வைகோ முடிவு அதிர்ச்சி அளிக்கிறது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். மல்லை சத்யாவுடனான மோதல் போக்கினாலேயே ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ, பதவி விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வைகோவை சந்தித்து துரை வைகோ பேசி வருகிறார். இருவரது சந்திப்பினையடுத்து ம.தி.மு.க. உள்கட்சி விவகாரம் முடிவுக்கு வருமா என கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சமீபத்தில் பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு இடையே மோதல் நிலவி வந்த நிலையில் தற்போது ம.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025