எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 36-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் ஜெய்பூரில் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 178/5 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கினார். தனது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த இவர் 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார். மார்க்ரம் வீசிய பந்தில் ரிஷப் பந்திடம் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்த சூர்யவன்ஷி அழுதுகொண்டே வெளியேறினார். பலரும் இந்த இளம் வீரருக்கு வாழ்த்துகளை தெரிவித்துவரும் நிலையில் கூகுள் சி.இ.ஒ. சுந்தர் பிச்சை தனது எக்ஸ் தளத்தில், “8-ஆவது படிக்கும் சிறுவனின் ஐ.பி.எல். விளையாட்டை பார்ப்பதற்காக எழுந்தேன்!!! என்ன ஒரு அறிமுகம்!” எனக் கூறியுள்ளார். சுந்தர் பிச்சை தமிழ்நாட்டில் பள்ளியில் படிக்கும்போது கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை - ஐதராபாத் டிக்கெட் இன்று விற்பனை தொடக்கம்
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி மற்றும் 2 வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறி வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற எதிர்வரும் போட்டிகளில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற சூழலில் விளையாட உள்ளது.சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் விலகிய நிலையில் கேப்டன் பொறுப்பை மகேந்திரசிங் தோனி மீண்டும் ஏற்றுள்ளார். தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்கு பிறகு தோனி தலைமையில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.
நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சென்னை அணி , மும்பை அணியுடன் மோதியது. தொடர்ந்து வரும் 25ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை அணி , ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த நிலையில், சென்னை - ஐதராபாத் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை காலை 10:15க்கு ஆன்லைனில் தொடங்குகிறது.
கொல்கத்தா அணியில் இணைந்த அபிஷேக் நாயர்
இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக உள்ள மும்பையைச் சேர்ந்த அபிஷேக் நாயர் நீக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அபிஷேக் நாயர் நீக்கம் குறித்து பி.சி.சி.ஐ. இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில் அவர், ஐ.பி.எல். தொடரில் கே.கே.ஆர். (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளார். அவரை வரவேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
அபிஷேக் நாயர் இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் நியமிக்கப்பட்டார். 8 மாதங்களிலேயே அவர், நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி பட்டம் வென்ற போது அபிஷேக் நாயர், துணை பயிற்சியாளராகவும், ஆலோசகராவும் பணியாற்றியிருந்தார். மேலும் கே.கே.ஆர். அகாடமியிலும் வீரர்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்து வந்தார்.
ஆர்.சி.பி. அணியில் இருந்து லிவிங்ஸ்டன் அதிரடி நீக்கம்
ஐ.பி.எல். 2025-இன் 37-ஆவது போட்டியில் முல்லன்பூர் திடலில் நடைபெறும் போட்டியில் ஆர்.சி.பி., பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்.சி.பி. அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். ஆர்.சி.பி. அணியில் லிவிங்ஸ்டன் நீக்கப்பட்டு, ரோமாரியோ ஷெப்பர்டு சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் இல்லை என அதன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.
10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள பஞ்சாப் இதில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் முதலிடத்துக்குச் செல்லும். 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளஆர்.சி.பி. இந்தப் போட்டியில் அபாரமாக வென்றால் முதலிடத்துக்குச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.
ஐதராபாத் மைதானத்தில் அசாருதீனின் பெயர் நீக்கம்
ஐதராபாத் உப்பல் மைதானத்தின் ஸ்டாண்ட் ஒன்றுக்கு, முன்னாள் வீரர் முகமது அசாருதின் பெயர் சூட்டப்பட்டதை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் குறைகேட்பு அதிகாரி.ரத்து செய்தார் 'வி.வி.எஸ். லக்ஷ்மன் ஸ்டாண்ட்' என இருந்ததை, 2019ம் ஆண்டில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த அசாருதின் தலைமையிலான நிர்வாகக் குழு, 'முகமது அசாருதின் ஸ்டாண்ட்' என பெயர் மாற்றம் செய்தது. இது அதிகார துஷ்பிரயோகம் என அளிக்கப்பட்ட புகாரின்பேரில் குறைகேட்பு அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சூர்யவன்ஷியை பாராட்டிய லக்னோ அணி உரிமையாளர்
ஐ.பி.எல். தொடரின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 36-வது லீக் போட்டியில் முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது. இதற்கிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி இம்பேக்ட் பிளேயர் அடிப்படையில் தொடக்க வீரராக களம் இறங்கினார். இதன்மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சூர்யவன்ஷி 14 வயது 23 நாட்களில் அறிமுகம் ஆகியுள்ளார்.
மேலும், வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அறிமுகப் போட்டியிலேயே அபாரமாக விளையாடிய 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியை லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தே.மு.தி.க.வுடன் கூட்டணியா..? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
08 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையா என்ற தகவலுக்கு அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.
-
விசில் அடித்த த.வெ.க.வினர்: செங்கோட்டையன் கிண்டல்
08 Feb 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க.
-
ஓ.பன்னீர் செல்வத்துடன் பேச மூன்ற மாத அவகாசம் உள்ளது: அண்ணாமலை பேட்டி
08 Feb 2026சிவகங்கை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனித்துவிடப்படவில்லை. எங்களுடன் தான் இருக்கிறார்.
-
வருகிற 13-ம் தேதி சேலத்தில் நடைபெறும் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி
08 Feb 2026சேலம், சேலத்தில் வரும் 13-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சேலம் மாநகர காவல் துறை அனுமதி வழங்கியுள்
-
தேர்தலில் தி.மு.க.வுடன்தான் காங்கிரஸ் கட்சி பயணிக்கும்: மதுரையில் செல்வப்பெருந்தகை பேட்டி
08 Feb 2026மதுரை, காங்கிரஸ் கட்சி வருகிற தேர்தலில் தி.மு.க.வுடன் தான் பயணிக்கும்.
-
திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஆந்திரா முன்னாள் முதல்வரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
08 Feb 2026சென்னை, சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
சட்டசபை தேர்தலில் தி.மு.க.விடம் அதிக தொகுதிகளை கேட்போம்: திருமா திட்டவட்டம்
08 Feb 2026சென்னை, இந்த முறை சட்டசபை தேர்தலில் நாங்கள் கூடுதலான இடங்களில் போட்டியிட விரும்புகிறோம்.
-
எப்ஸ்டீனை சந்தித்தேனா? தலாய் லாமா விளக்கம்
08 Feb 2026லகாசா, எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்தில், தனது பெயரை தொடர்புப்படுத்தி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என திபெத்திய மதகுரு தலாய் லாமா மறுத்துள்ளார்.&nbs
-
அரசியல் களத்தில் த.வெ.க.வுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டும் தான்: செங்கோட்டையன் பேட்டி
08 Feb 2026ஈரோடு, தமிழ்நாடு அரசியல் களத்தில் த.வெ.க.வுக்கு எதிரி தி.மு.க.தான். அ.தி.மு.க. ஒரு கட்சியே அல்ல என்று த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
குரூப்-2, 2ஏ தேர்வுகள் திடீர் ரத்து: தேர்வர்கள் மறியலால் பரபரப்பு
08 Feb 2026சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டதால் சென்னை பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –08-02-2026
08 Feb 2026 -
மலேசியாவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் பாடல்
08 Feb 2026கோலாலம்பூர், மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த விருந்து நிகழ்ச்சியில், நடிகர் எம்.ஜி.ஆரின் ’நாளை நமதே’ பாடல் பா
-
மத்திய அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது: மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பெருமிதம்
08 Feb 2026புதுடில்லி, மத்திய அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது என்றும், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நமது வ
-
பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருநாட்டு உறவுகளுக்கு முக்கியம்: மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்
08 Feb 2026கோலாலம்பூர், பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருநாட்டு உறவுகளுக்கு மிகவும் முக்கியமானது என மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
08 Feb 2026- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனம், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனம்.
- வைத்தீசுவரன் செல்வமுத்து குமாரசுவாமி புறப்பாடு.
- திருமயம் ஆண்டாள் பவனி.
- இராமநாதபுரம் செட்ட
-
இன்றைய நாள் எப்படி?
08 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
08 Feb 2026


