முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீர்திருத்தங்களை ஆதரித்தவர்: போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      உலகம்
Pope 2023 06 17

வாடிகன், கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  கத்தோலிக்க திருச்சபையைத் தாண்டி, அவர் தனது பணிவு மற்றும் ஏழைகள் மீதான தூய அன்பின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தினார். இந்த ஆழ்ந்த இழப்பை உணரும் அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. போப் பிரான்சிஸின் மரபு நம்மை நீதியான, அமைதியான மற்றும் இரக்கமுள்ள உலகத்தை நோக்கி தொடர்ந்து வழிநடத்தும் என தெரிவித்துள்ளார்.

 வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “போப் பிரான்சிஸ், சாந்தியடையட்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் போப், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உடன் தனித்தனி சந்தர்ப்பங்களில் சந்தித்த புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியா வந்துள்ள ஜே.டி. வான்ஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  உலகம் முழுவதும் அவரை நேசித்த கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கு என் இதயம் இரங்குகிறது. நேற்று அவரைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன், இருப்பினும் அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் கோவிட் தொற்றின் ஆரம்ப நாட்களில் அவர் ஆற்றிய மறையுரைக்காக நான் எப்போதும் அவரை நினைவில் கொள்வேன். அது மிகவும் அழகாக இருந்தது. கடவுள் அவரது ஆன்மாவை அமைதிப்படுத்தட்டும்.” என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆழ்ந்த நம்பிக்கையும் எல்லையற்ற இரக்கமும் கொண்ட அவர், ஏழைகளை மேம்படுத்துவதற்கும், பிரச்சினை நிறைந்த உலகில் அமைதிக்காக அழைப்பு விடுப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். மத்திய கிழக்கில் அமைதிக்காகவும், (காசாவில்) பிணைக் கைதிகள் பாதுகாப்பாகத் திரும்புவதற்காகவும் அவர் செய்த பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  நிதானமான வாழ்க்கை முறை, சேவை மற்றும் இரக்கச் செயல்கள் மூலம் போப் பிரான்சிஸ், கத்தோலிக்கர்கள் மற்றும் கத்தோலிக்கரல்லாதவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார். நாங்கள் அவரை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “போப் பிரான்சிஸ் ஓர் ஆழ்ந்த நம்பிக்கையாளராகவும், மாறுபட்ட பாரம்பரியவாதியாகவும் இருந்தார்! அவர் சீர்திருத்தத்தை ஆதரிப்பவராகவும், மதங்களுக்கு இடையேயான உரையாடலை ஆதரிப்பவராகவும் இருந்தார். சுற்றுச்சூழல் மீதான அவரது அக்கறையும், மனித கடத்தலுக்கு எதிரான அவரது முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை. சிறந்த புரிதலுக்கான அவரது அழைப்பு அவரது ஆதரவாளர்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து