முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த சீசனுக்கு ஆடும் லெவனை தயார் செய்ய வேண்டும்: கேப்டன் தோனி

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      விளையாட்டு
Dhoni 2024-10-28

Source: provided

மும்பை : நடப்பு ஐ.பி.எல். சீசனில் 6-வது தோல்வியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதல் சுற்றில் அந்த அணிக்கு இன்னும் 6 ஆட்டங்கள் மட்டுமே உள்ள சூழலில் பிளே-ஆஃப் சுற்றுக்கு சி.எஸ்.கே. தகுதி பெறுமா? என்பது குறித்து தோனி கருத்து தெரிவித்துள்ளார்.  

5 முறை சாம்பியன்... 

ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற இரண்டு அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2008 சீசன் முதல் 2024 சீசன் வரையில் மூன்று முறை, அதவாது 2020, 2022, 2024-ஆம் ஆண்டு சீசன்களில் மட்டுமே முதல் சுற்றான லீக் சுற்றோடு சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறி உள்ளது.

சஸ்பெண்ட்...

 2016 மற்றும் 2017 சீசன்களில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காரணத்தால் சி.எஸ்.கே. விளையாடவில்லை. மற்ற அனைத்து சீசன்களிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 10 இறுதிப் போட்டிகளில் விளையாடி உள்ளது. 5 முறை சாம்பியன் பட்டமும், 5 முறை இரண்டாவது இடமும் பிடித்துள்ளது. 2009 சீசனில் அரை இறுதி மற்றும் 2014 சீசனில் பிளே-ஆஃப் சீசனில் விளையாடி உள்ளது.

சோப்பிக்க வில்லை...

நடப்பு சீசனின் ஆரம்பம் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உள்ளூர், வெளியூர் என எங்கு சென்றாலும் சி.எஸ்.கே. வீரர்கள் சோப்பிக்கத் தவறுகிறார்கள். நடப்பு சீசனில் 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளை சி.எஸ்.கே. பெற்றுள்ளது. பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் படுமோசமாக உள்ளது. 

19 கேட்ச்கள்  மிஸ்... 

இந்த சீசனில் இதுவரை சுமார் 19 கேட்ச்களை நழுவ விட்டுள்ளது சி.எஸ்.கே.. விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் கேட்ச்களை பிடிக்க தவறி உள்ளது. கேட்ச் மிஸ் செய்யாத போட்டியே இல்லை. அதே போல பேட்டிங்கில் இலக்கை விரட்டுவது மற்றும் இலக்கை நிர்ணயிப்பது என இரண்டிலும் சொதப்பி வருகிறது. பந்து வீச்சில் நூர் அகமது, கலீல் அகமது ஆகியோர் ஆறுதல் தருகின்றனர்.

சிறப்பாக இல்லை...

வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் உடனான தோல்விக்கு பிறகு சி.எஸ்.கே. கேப்டன் தோனி, “இத்தனை ஆண்டுகளாக நாங்கள் சக்ஸஸ் பெற்ற அணியாக இருக்க காரணம் சிறந்த கிரிக்கெட் விளையாடியது தான் என எண்ணுகிறேன். கடந்த 2020 சீசன் எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. நாங்கள் சிறப்பான முறையில் கிரிக்கெட் ஆட வேண்டிய அவசியம் உள்ளது. எங்கள் அணியில் உள்ள ஓட்டைகளை அடைத்து எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். 

அடுத்த சீசனுக்கு... 

ஒவ்வொரு ஆட்டமாக அணுகுவோம். இதில் நாங்கள் தோல்வி கண்டால் அடுத்த சீசனுக்கான அணி சேர்க்கையை கண்டறியும் பணியை மேற்கொள்வோம். அதற்காக ஆடும் லெவனில் அதிக வீரர்களை மாற்ற முடியாது. அடுத்த சீசனுக்கு ஆடும் லெவனை செக்யூர் செய்ய வேண்டும். அதன் மூலம் வலுவான கம்பேக் கொடுக்க முடியும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து