எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுச்சேரி : புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க. மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
அ.தி.மு.க. மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமையில் கடலூர் சாலை தற்காலிக பேருந்து நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே புதிய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. இன்னும் திறக்கப்படாததால் நேற்று தற்காலிக பேருந்து நிலையம் முன்பு போராட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது: தற்போது சுமார் 33 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. பேருந்து நிலையம் விரிவாக்கம் முடிவடைந்து கடந்த 4 மாதங்களுக்கு முன் நகராட்சியிடம் பேருந்து நிலையம் ஒப்படைக்கப்பட்ட பிறகும் இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது ஏ.எப்.டி மைதானத்தில் தற்காலிகமாக இயங்கும் பேருந்து நிலையத்தால் மக்கள் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அங்கு தினசரி வரும் பயணிகள் வசதிக்காக கழிப்பறைகள் கூட இல்லை. தற்காலிக பேருந்து நிலையத்தில் ஏற்படும் புழுதிகாற்றினால் சுவாசக்கோளாறு உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர்.
இது சம்பந்தமாக பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பொறுப்பற்ற முறையில் உள்ளனர். உண்மை நிலையை முதல்வர் உணர்ந்து உடனடியாக சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளை அழைத்து பேசி கட்டிமுடிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு இந்த மாதத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


