எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களைத் தேர்தல் நேரத்தில் மட்டுமே நம்ப வைத்து ஏமாற்றுவதைக் கைவிட்டு விட்டு கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்கெனவே இருந்த அரசு நிராகரித்து, அவர்களைக் கையறு நிலைக்குத் தள்ளியது. அந்த நேரத்தில், எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஆதரவையும் பெற்று 2021இல் ஆட்சிக்கும் வந்தது. ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்ததும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது.
தற்போது, தி.மு.க. அரசைக் கண்டித்து ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஓட்டுக்காகவும் ஆட்சிக்காகவும் உண்மையைச் சொல்லாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றிய தி.மு.க. அரசை, எங்கள் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மீண்டும் வன்மையாகக் கண்டிக்கிறது.
சட்டப் பேரவையில் நடைபெற்ற விவாதத்தில், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். உரிய நேரம் என்றால் அது எந்த நேரம்? ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் முடிவடையும் நிலையில் அந்த உரிய நேரம் இன்னும் வரவில்லையா?
அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் வர உள்ள நிலையில், மீண்டும் அவர்களை நம்ப வைத்து அவர்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காகத் தேர்தலுக்குச் சில தினங்களுக்கு முன்பு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது பற்றிய அறிவிப்பு வெளியிடலாம் என்று ஆட்சியாளர்கள் எண்ணுகிறார்களா? அப்படி என்றால் அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது; அரசு ஊழியர்களும் ஆட்சியாளர்களும் பொய் வாக்குறுதிகளை நம்பி மீண்டும் மீண்டும் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |