Idhayam Matrimony

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் : காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா அறிவிப்பு

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      இந்தியா
Umar-Abdulla

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள்  நடத்திய தாக்குதல் உயிரிழந்தோருக்கு அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா நிவாரணம் அறிவித்துள்ளார்.

பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூரத் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். முன்னதாக கடந்த 2018ல் புல்வாமாவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

இதுதொடர்பாக முதல்வர் ஒமர் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில், தாக்குதல் குறித்துச் செய்தியறிந்து நம்பமுடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன். சுற்றுலாப் பயணிகள் மீதான இத்தாக்குதல் அருவருப்பானது. பெஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பின்னணில் உள்ளவர்களை நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து