முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வணிக வரி, பத்திரப்பதிவு துறை மூலம் அரசுக்கு ரூ.5.80 லட்சம் கோடி வருவாய்: சட்டசபையில் அமைச்சர் மூர்த்தி தகவல்

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      தமிழகம்
Moorthy 2023 06 17

சென்னை, கடந்த 4 ஆண்டுகளில் 'வணிக வரி, பத்திரப்பதிவு துறை வாயிலாக அரசுக்கு ரூ.5.80 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சட்டசபையில் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் , வணிக வரி மற்றும் பதிவுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு, அமைச்சர் மூர்த்தி அளித்த பதிலுரையில் தெரிவித்ததாவது.,  மாநில அரசின் வரி வருவாயில் வணிக வரித்துறை வாயிலாக, 71.6 சதவீதமும், பதிவுத்துறை வாயிலாக, 15.4 சதவீதம் பெறப்படுகிறது. அரசின் மொத்த வருவாயில், 87 சதவீதம் ஈட்டித்தரும் துறைகளாக வணிக வரி மற்றும் பதிவுத்துறைகள் உள்ளன.

முந்தைய, 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், வணிக வரித்துறை மொத்தமாக ஈட்டிய வரி வருவாய், 6.87 லட்சம் கோடி ரூபாய். ஆனால், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற, கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், இதுவரை, 5.08 லட்சம் கோடி ரூபாய் வருவாயை, வணிக வரித்துறை ஈட்டியுள்ளது. பதிவுத்துறையில், 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய், 88 ஆயிரத்து, 844 கோடி ரூபாய். ஆனால், தி.மு.க., ஆட்சியில், இதுவரை 72 ஆயிரத்து, 4 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் வணிக வரித்துறையும், பதிவுத்துறையும் சேர்ந்து மொத்தமாக, 5.80 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டி, வரலாற்று சாதனை படைத்துள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து