முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தோருக்கு ராகுல் நேரில் ஆறுதல்

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      இந்தியா
Rahul 2024-12-03

Source: provided

ஸ்ரீநகர் : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடூர பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஜம்மு- காஷ்மீர் சென்றுள்ளார். ஸ்ரீநகர் ராணுவ மருத்துவமனைக்குச் சென்ற அவர், பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோரைச் சந்தித்துப் பேசி ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

சமூகத்தில் பிளவு ஏற்படுவதே இந்த தாக்குதலின் குறிக்கோளாக இருக்கிறது. எனவே பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் துணையாக நானும் எங்களுடைய கட்சியும் நிற்போம்.  இந்த தாக்குதல் மனித குலம் மீதான தாக்குதல். அன்பையும், சகோதரத்துவத்தையும் அழிக்கும் வெட்கக்கேடான செயல்" என்று கூறினார்.

மேலும் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்தும் ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து