முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை வந்த விஜய்க்கு த.வெ.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      அரசியல்
vijay-2025-04-26

கோவை, த.வெ.க. பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க கோவை வந்துள்ள விஜய்-க்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு கோவையில் 2 நாட்கள் (ஏப். 26, 27) நடைபெறுகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் கருத்தரங்கில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். இதையடுத்து சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார் விஜய். விமான நிலையத்தில் முன்னதாகவே ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்தனர்.

விமான நிலையத்திற்கு வந்த விஜய், பிரசார வானத்தில் ஏறியபடி தொண்டர்களுக்கு கையசைத்தார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து பேரணியாகச் சென்றார். வழிநெடுக தொண்டர்கள் அவரை வரவேற்றனர். அப்போது தொண்டர்கள், பிரசார வானத்தில் ஏறி விஜய்யிடம் பேசிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து