முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் ஆனார் ஆனந்த் அம்பானி

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      வர்த்தகம்
Anant-Ambani

மும்பை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வாரியக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த நியமனம் 2025 மே 1, முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் அம்பானி இந்தப் பொறுப்பில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன வாரியத்தில் நிர்வாகமற்ற இயக்குநராக ஆனந்த் அம்பானி தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி தற்போது ரிலையன்ஸ் ஜியோ இன்போகாமின் தலைவராகவும், மகள் இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸில் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த இருவரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன குழுவில் நிர்வாகமற்ற இயக்குநர்களாகவும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து