முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோனி ஓய்வு: கில்கிறிஸ்ட்

புதன்கிழமை, 30 ஏப்ரல் 2025      விளையாட்டு
Dhoni 2024-03-12

Source: provided

சென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 9 போட்டியில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 7-ல் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் கவுரவமான இடத்தை பிடிக்கும்.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிரிஸ்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது , தோனி நிரூபிப்பதற்கு எதுவுமே இல்லை. அவருக்கு என்ன செய்வது என்று தெரியும், அவர் இனி ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டிய அவசியம் இல்லை . நான் உங்களை நேசிக்கிறேன் தோனி. நீங்கள் ஒரு சாம்பியன் என தெரிவித்துள்ளார். 

___________________________________________________________________________________

நான் சிறந்த பீல்டரா? நரேன்

டெல்லிக்கு எதிரான போட்டியின் ஆட்டநாயகன் விருது சுனில் நரேனுக்கு வழங்கப்பட்டது. ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது.  ஆட்டநாயகன் விருது வென்ற சுனில் நரேன் அளித்த பேட்டியில் கூறியதாவது, இது முழுமையாக அணியின் முயற்சி. நாங்கள் மிடில் ஓவர்களில் நன்றாக செயல்பட்டோம். ரகுவன்ஷி, ரிங்கு சிங் பேட்டிங்கில் அசத்தினார்கள். பின்னடைவைச் சந்தித்தாலும் அதிலிருந்து கம்பேக் கொடுத்து அணியின் வெற்றிகளில் பங்காற்ற எனக்கு நானே ஆதரவு கொடுக்கிறேன். நீங்கள் தடுமாறினாலும் நன்றாக முடிக்கக்கூடிய போட்டிகள் இருக்கும்.

நான் எடுத்த அனைத்து விக்கெட்டுகளையும் ரசித்தேன். நான் சிறந்த பீல்டர் கிடையாது. இருப்பினும் வாய்ப்பு கிடைக்கும் போது ரன் அவுட் செய்வது எப்போதும் நல்லது. அதற்கு முடிந்தளவுக்கு வேகமாக பந்தை சுழற்றி தூக்கி எறிய வேண்டும். அழுத்தமான சூழ்நிலையில் கேப்டன் உங்களை நம்பி பவுலிங் செய்யும் வாய்ப்பைக் கொடுப்பதற்கான நம்பிக்கையை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட வீரராக நீங்கள் இருக்க வேண்டுமெனில் போட்டிகள் இல்லாத நேரத்திலும் கடினமாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

___________________________________________________________________________________

ஓய்வு அறிவித்தது ஏன்? அஸ்வின்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின்போது ஓய்வு அறிவித்தது ஏன் என்று அஸ்வின் மனம் திறந்துள்ளார். பிரிஸ்பனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின்போது அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது, இன்னும் 2 டெஸ்ட்கள் இருக்கும்போது எப்படி ரிட்டையர் ஆவார் என்ற கேள்விகள் எழுந்தன. 

இந்நிலையில், ‘மைக் டெஸ்டிங் 1,2,3’ என்ற பாட்காஸ்ட்டில் மைக் ஹஸ்சியுடன் உரையாடிய அஸ்வின் மேலும் சில விஷயங்களைக் கூறினார். உள்ளபடியே கூற வேண்டுமெனில், 100-வது டெஸ்ட்டுடன் ஓய்வு அறிவிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் சரி, உள்நாட்டுத் தொடர் விளையாடுவோம் என்று முடிவெடுத்தேன். அதாவது நன்றாக ஆடுகிறோம், விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறோம் இன்னும் கொஞ்சம் ஆடலாமே என்று முடிவெடுத்தேன். கொஞ்சம் கூட விளையாடலாம் என்பது அர்த்தமுள்ள முடிவுதான். நான் கேளிக்கையுடன் தான் இதைச் செய்தேன். மீண்டும் மைதானத்துக்கு திரும்புவதற்காக நான் மேற்கொண்ட பயிற்சி, உடலுழைப்புகள், கடினமான அடியெடுப்புகள் அனைத்தும் என் குடும்ப நேரத்தை இரையாக்கின என்பதுதான் உண்மை என அஸ்வின் கூறியுள்ளார்.

___________________________________________________________________________________

ஆசிய போட்டிகளில்  மீண்டும்  கிரிக்கெட் 

ஆசிய போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகள் இருக்குமென ஓசிஏ (ஒலிம்பிக் கவுன்சில் ஆஃப் ஏசியா) உறுதியளித்துள்ளது. ஆசிய போட்டிகள் ஜப்பானில் வரும் செப்.19 முதல் அக்.4ஆம் தேதிவரை நடைபெற இருக்கின்றன. நகோயா நகரத்தில் ஏஐஎன்ஏஜிஓசி அமைப்பின் கூட்டத்தில் கிரிக்கெட், மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட்ஸ் இரண்டும் சேர்க்கப்பட்டதாக ஓசிஏ தெரிவித்துள்ளது. இதில் கிரிக்கெட் போட்டிகள் டி20 வடிவில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் டி20 வடிவில் போட்டிகள் நடைபெற இருப்பதால் இந்தப் போட்டிகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.போட்டி நடைபெறும் இடங்கள், அணிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கிரிக்கெட் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி மாகாணத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட இடம் குறித்து தகவல் ஏதுவும் கூறப்படவில்லை. ஆசிய போட்டிகளில் நான்கு முறை கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் 2010, 2014, 2023இல் கிரிக்கெட் போட்டிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

___________________________________________________________________________________

திருப்பதி கோவிலில் ஆர்சிபி வீரர்கள்

ஆர்சிபி வீரர்கள் திருப்பதி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த காட்சிகள் வைரலாகி வருகின்றனர். இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி ரஜத் படிதார் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆர்சிபி அணி 10 போட்டிகளில் 7இல் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே உடன் மே.3ஆம் தேதி தங்களது சொந்தத் திடலில் மோதவிருக்கிறது.

இந்நிலையில், ஆர்சிபி வீரர்கள் ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா திருப்பதி திருமலை கோவிலுக்குச் சென்று தரிசத்துள்ளார்கள். ஆர்சிபி வீரர்களுடன் ஆர்சிபி வீராங்கனை ஷ்ரேயங்கா பாடீலும் சென்றுள்ளார். இந்தப் புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

___________________________________________________________________________________

பாக். செல்லும் வங்கதேச அணி!

வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் சென்று அங்கு கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கிறது. வருகிற மே மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேச அணி விளையாடவிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ஃபைசலாபாத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் சர்வதேசப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப்பின் ஒருபகுதியாக கடந்தாண்டு பாகிஸ்தான் சென்றிருந்த வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முழுமையாக தொடரைக் கைப்பற்றியது.

இந்தத் தொடரில் முதலில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அடுத்தாண்டு வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு மொத்தமாக 5 டி20 போட்டிகளில் விளையாட இரண்டு அணி நிர்வாகத்தினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த 5 டி20 போட்டிகளும் மே 25 ஆம் தேதி தொடங்கி ஜூன் 3 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதுவரை 24 சர்வதேச டெஸ்ட் போட்டிகளை நடத்திய ஃபைசலாபாத் இக்பால் திடலில் 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் சர்வதேசப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

___________________________________________________________________________________

ஆலோசகராகும் டிம் சௌதி!

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியூசிலாந்து வீரர் டிம் சௌதி நியமிக்கப்படவுள்ளதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இங்கிலாந்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவிருக்கிறது. இந்தத் தொடரில் நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதியை இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக நியமிக்க அந்த அணி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

36 வயதான டிம் சௌதி, கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஏற்கனவே, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அவரது அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டிம் சௌதியும் அவருடன் இணைந்து செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவுன்டி அணியான லங்காஷயருடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடுவதால், அவர் அணியில் இடம்பெறமாட்டர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் உள்ளூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடிய டிம் சௌதி, இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 391 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து