Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி மாற்றம்?

புதன்கிழமை, 7 மே 2025      விளையாட்டு
IPL 2023 08 02

Source: provided

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், எல்லையில் பதற்றம் நிலவுவதால் ஐபிஎல் போட்டி மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று டெல்லி-பஞ்சாப் இடையே தர்மசாலாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டி மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

____________________________________________________________________________

கிரிக்கெட் பிரபலங்கள் பாராட்டு

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்திய முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஒற்றுமையில் அச்சமற்றவர். வலிமையில் எல்லையற்றவர். இந்தியாவின் கேடயம் அதன் மக்கள். இந்த உலகில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. நாங்கள் ஒரே அணி. ஜெய் ஹிந்த் என பதிவிட்டுள்ளார்.

முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்ட பதிவில், ஜெய் ஹிந்த்... ஆபரேஷன் சிந்தூர் என்பது பஹல்காமில் எங்கள் அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு இந்தியாவின் பதில் என பதிவிட்டுள்ளார். முன்னாள் வீரர் சேவாக் வெளியிட்ட பதிவில், ஜெய் ஹிந்த்.. ஆபரேஷன் சிந்தூர் என்ன ஒரு பொருத்தமான பெயர் என பதிவிட்டுள்ளார். முன்னாள் வீரர் தவான் வெளியிட்ட பதிவில், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்கிறது என பதிவிட்டுள்ளார். இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் வெளியிட்ட பதிவில், ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர் என பதிவிட்டுள்ளார். 

____________________________________________________________________________

இன்று டிக்கெட் விற்பனை 

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 56 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதின. நடப்பு தொடரில் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சென்னை அணி முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில், வரும் 12ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ளது. காலை 10.15 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. 

____________________________________________________________________________

சிறுவர்களுடன் விளையாடிய பட்லர்

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களம் கண்டது. குஜராத் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. அப்போது குஜராத் 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. 

இதையடுத்து மழை நின்ற உடன் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி 19 ஓவரில் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி பெற கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் 19வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 147 ரன்கள் எடுத்து மும்பையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், குஜராத் வீரர் ஜோஸ் பட்லர் மும்பையில் தெருக்களில் சிறுவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து