எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நேற்றுமுன்தினம் (மே 9) தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அரசு உதவி பெறும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வழங்கப்படும் இளநிலை வேளாண்மை மற்றும் அது தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (மே 9) காலை தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வேளாண்மை பல்கலைகக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை தொடர்பான இளநிலை படிப்புகளுக்கு ஒருசேர மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பிஎஸ்சி (ஆனர்ஸ்) விவசாயம், தோட்டக்கலை, வனவியல், பட்டுவளர்ப்பு, பிடெக் வேளாண் பொறியியல், பிடெக் உணவு தொழில்நுட்பம், பிடெக் உயிரி தொழில்நுட்பம், உயிரி தகவலியல் உள்பட பல்வேறு படிப்புகளில் மொத்தம் 6921 இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. வேளாண் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூன் 8-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.600. எஸ்சி, எஸ்டி மாணவர்களாக இருந்தால் ரூ.300 மட்டும். மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஜூன் 16-ம் தேதி வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து, விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான இணையவழி கலந்தாய்வும் தொடங்கும்.
மொத்தமுள்ள இடங்களில் 7.5 சதவீத இடங்கள் அதாவது 403 இடங்கள் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், பிளஸ் 2-வில் வேளாண் பிரிவு படித்த மாணவர்களுக்கு 223 இடங்களும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 20 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 128 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 20 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன,” என்று அமைச்சர் கூறினார். இந்த சந்திப்பின்போது வேளாண்துறை செயலர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் வி.தட்சிணாமூர்த்தி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் (பொறுப்பு) ஆர்.தமிழ்வேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தே.மு.தி.க.வுடன் கூட்டணியா..? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
08 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையா என்ற தகவலுக்கு அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.
-
விசில் அடித்த த.வெ.க.வினர்: செங்கோட்டையன் கிண்டல்
08 Feb 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க.
-
ஓ.பன்னீர் செல்வத்துடன் பேச மூன்ற மாத அவகாசம் உள்ளது: அண்ணாமலை பேட்டி
08 Feb 2026சிவகங்கை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனித்துவிடப்படவில்லை. எங்களுடன் தான் இருக்கிறார்.
-
வருகிற 13-ம் தேதி சேலத்தில் நடைபெறும் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி
08 Feb 2026சேலம், சேலத்தில் வரும் 13-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சேலம் மாநகர காவல் துறை அனுமதி வழங்கியுள்
-
தேர்தலில் தி.மு.க.வுடன்தான் காங்கிரஸ் கட்சி பயணிக்கும்: மதுரையில் செல்வப்பெருந்தகை பேட்டி
08 Feb 2026மதுரை, காங்கிரஸ் கட்சி வருகிற தேர்தலில் தி.மு.க.வுடன் தான் பயணிக்கும்.
-
திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஆந்திரா முன்னாள் முதல்வரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
08 Feb 2026சென்னை, சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
சட்டசபை தேர்தலில் தி.மு.க.விடம் அதிக தொகுதிகளை கேட்போம்: திருமா திட்டவட்டம்
08 Feb 2026சென்னை, இந்த முறை சட்டசபை தேர்தலில் நாங்கள் கூடுதலான இடங்களில் போட்டியிட விரும்புகிறோம்.
-
எப்ஸ்டீனை சந்தித்தேனா? தலாய் லாமா விளக்கம்
08 Feb 2026லகாசா, எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்தில், தனது பெயரை தொடர்புப்படுத்தி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என திபெத்திய மதகுரு தலாய் லாமா மறுத்துள்ளார்.&nbs
-
குரூப்-2, 2ஏ தேர்வுகள் திடீர் ரத்து: தேர்வர்கள் மறியலால் பரபரப்பு
08 Feb 2026சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டதால் சென்னை பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
அரசியல் களத்தில் த.வெ.க.வுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டும் தான்: செங்கோட்டையன் பேட்டி
08 Feb 2026ஈரோடு, தமிழ்நாடு அரசியல் களத்தில் த.வெ.க.வுக்கு எதிரி தி.மு.க.தான். அ.தி.மு.க. ஒரு கட்சியே அல்ல என்று த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –08-02-2026
08 Feb 2026 -
மலேசியாவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் பாடல்
08 Feb 2026கோலாலம்பூர், மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த விருந்து நிகழ்ச்சியில், நடிகர் எம்.ஜி.ஆரின் ’நாளை நமதே’ பாடல் பா
-
மத்திய அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது: மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பெருமிதம்
08 Feb 2026புதுடில்லி, மத்திய அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது என்றும், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நமது வ
-
பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருநாட்டு உறவுகளுக்கு முக்கியம்: மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்
08 Feb 2026கோலாலம்பூர், பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருநாட்டு உறவுகளுக்கு மிகவும் முக்கியமானது என மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
08 Feb 2026- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனம், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனம்.
- வைத்தீசுவரன் செல்வமுத்து குமாரசுவாமி புறப்பாடு.
- திருமயம் ஆண்டாள் பவனி.
- இராமநாதபுரம் செட்ட
-
இன்றைய நாள் எப்படி?
08 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
08 Feb 2026


