முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத் தேர்வு முடிவுகள்: நேரடி மறுகூட்டல் விண்ணப்பம் முறை ரத்து

வெள்ளிக்கிழமை, 9 மே 2025      தமிழகம்
10th-exam 2023 04 04

சென்னை, 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளுக்குப் பின் நேரடியாக மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல் பெற்ற பிறகு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் முறை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற்ற பிறகு முடிவெடுக்க சரியாக இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கையை தேர்வுத் துறை எடுத்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா். பிளஸ் 2 தோ்வு முடிவுகள் நேற்று முன்தினம் (மே 8) வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் 7,53,142 மாணவ, மாணவிகள் (95.03 சதவிகிதம்) தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல், மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர்.

தேர்வு எழுதியதில் 4,05,472 (96.70 சதவிகிதம்) மாணவிகளும், 3,47,670 (93.16 சதவிகிதம்) மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 26,877 பேர் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து